Connect with us

Cinemapettai

உச்சக்கட்ட கோபத்தில் சாய் பல்லவி.. இதுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?

sai-pallavi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உச்சக்கட்ட கோபத்தில் சாய் பல்லவி.. இதுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?

அடிப்படையில் டாக்டரான சாய்பல்லவி(sai pallavi) சினிமாவின் மீதுள்ள ஆசையால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். பிறகு பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார் என்றால் மிகையாகாது.

பிரேமம் படத்தின் வெற்றி சாய்பல்லவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது. தமிழில் பெரிய அளவில் வெற்றி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் அவர் டாப் ஹீரோயின்.

சாய் பல்லவி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில் எப்போதுமே சந்தோஷத்துடன் ட்விட்டரில் பதிவிடும் சாய்பல்லவி இந்த முறை கடும் கோபத்தில் பலரையும் சாடியுள்ளார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. மற்ற நடிகர்களைப் போல் ஏனோதானோ என சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் அழுத்தமாகக் குரல் கொடுத்துள்ளது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஒரு ஏழு வயது குழந்தை கற்பழிக்கப்பட்டு இறந்த செய்தி நாட்டையே உலுக்கியது. பெண்களை கண்களாய் நினைக்கும் தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு சோதனை அரங்கேறி இருக்கிறது.

இதனை பார்த்த சாய்பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டபடி திட்டி உள்ளார். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நம் நாட்டில் சுத்தமாக இல்லை எனும் கருத்தை முன்வைத்துள்ளார்.

மேலும் நம்மிடம் எதிர்க்க முடியாத வலிமை உள்ள ஆட்களிடம் நம்முடைய வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறோம் என உச்சகட்ட கோபத்தில் தெரிவித்துள்ளார். சாய்பல்லவியின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

saipallavi-tweet

saipallavi-tweet

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top