Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜிவி பிரகாஷ் உடன் அவரது மனைவி இணைந்து நடிக்கப் போகிறாரா.? இதோ அவரது மனைவியே கூறிய பதில்
Published on
தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். சமீப காலமாக இவர் நடிகர் அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் பாடகி சைந்தவியை 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் பல படங்களுக்கு இணைந்து பாடியுள்ளனர். சமீபத்தில் ஒருவர் பாடகி சைந்தவி இடம் நீங்கள் ஜிவி பிரகாஷ் கூட நடிப்பீர்களா என கேள்வி கேட்டார். அதற்கு அவர் இரவு பகலாக தூக்கமில்லாமல் உழைத்து வருகிறார். அதை என்னால் பார்க்க முடிகிறது அவரைப் போல என்னால் செயல்பட முடியாது என்றும்
மேலும் தனக்கு கேமரா என்றால் பயம் இருப்பதாகவும் அதனால் அவருடன் நடிக்க வாய்ப்பு இல்லை என்பதுபோல் கூறியுள்ளார் சைந்தவி. ஜிவி பிரகாஷ் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
