ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

பேட்மிண்டன்

மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை 21-14, 18-21, 21-17 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

அதேபோல மற்றொரு மகளிர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லீயை எதிர்கொண்டார். இதில் 21-18, 21-8 என்ற செட்கணக்கில் பி.வி.சிந்து வெற்று பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

– PV Sindhu – Saina Nehwal

இவர்கள் இருவரும் மோதிய இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. 21-18,23-21 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார் சாய்னா. இரண்டாவது செட்டில் 14 – 18 என்ற நிலையில் பின் தங்கிய சாய்னா தன் சிறப்பான ஆட்டத்தால் 23 – 21 என்று அந்த செட்டை வென்றார். நேர் செட்டுகளில் வென்று தங்கம் வென்றார் சாய்னா, சிந்துவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.