fbpx
Connect with us

சக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் !

Sports | விளையாட்டு

சக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் !

இந்த வருட கடைசி செலிபிரிட்டி திருமணங்களால் நிறைந்தது என்றால் அது மிகையாகாது. ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸ், ஈஷா அம்பானிக்கும் – அனந்த் பிரமால் வரிசையில் இணைந்துள்ளனர் சாய்னா நேவால் – பாருபள்ளி காஷ்யப்

சாய்னா நேவால்

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் சாய்னா நேவால். ஒலிம்பிக் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப் வெள்ளி என புகழில் உச்சத்தில் உள்ளார் சாய்னா. ஆடவர் பிரிவில் காஷ்யப்பும் உலக தரவரிசையில் 6ம் இடம் வரை சென்றவர். அர்ஜுனா விருதும் பெற்றவர். இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். 2005லிருந்து இருவரும் புலேலா கோபிசந்திடம் பயிற்சி பெற்று வந்தனர். காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன.

Saina Nehwal and Parupalli Kashyap

கடந்த செப்டம்பர் மாதம் நாங்கள் இருவரும் காதலித்து வருவது உண்மைதான், டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று சாய்னா அறிவித்தார்.

Saina Nehwal and Parupalli Kashyap

இந்நிலையில் இவர்கள் திருமணம் சமீபத்தில் நடந்துள்ளது. போட்டோக்களை சாய்னா தன ட்விட்டரில்  இதனை உறுதி படுத்தியுள்ளார்.

இதுவே எனது வாழ்வில் சிறந்த மேட்ச் என்றும் கூறியுள்ளார்.

விளையாட்டு வீரர்களை பொறுத்தவரை சானியா மிர்சா – சோயிப் மாலிக் , இஷாந்த் சர்மா – ப்ரதிமா சிங் வரிசையில் இந்த ஜோடியும் இணைந்துள்ளது

பலரும் இந்த ஜோடிக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Trending

To Top