Videos | வீடியோக்கள்
லைக்ஸ் குவிக்குது சாய்னா நேவால் பயோபிக் டீஸர்- பட்டய கிளப்பும் பரினீதி சோப்ரா
கிரிக்கெட், ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுகளும் உள்ளது என அவ்வப்பொழுது சில வீரர், வீராங்கனை சாதிப்பது வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடியும். அப்படி தங்கள் துறை விளையாட்டில் சாதித்த பெண்கள் ஏராளம். பி டி உஷா, மேரி கோம், போகத் சகோதரிகள், சானியா மிர்சா, சாய்னா நேவால் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகியுள்ளது. அமோல் குப்தே இயக்கியுள்ள சாய்னா படத்தில் பரினீதி சோப்ரா நடித்துள்ளார். பூஷன் குமார் தயாரித்துள்ளார். சாய்னா படம் மார்ச் 26 அன்று வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய்னா , ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டி சென்றவர். 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே, என இவரது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
