Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

49 வயதான ஹீரோவுடன் ஜோடி சேரும் சாய் பல்லவி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மோலிவுட்டில் ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு  அறிமுகமாகி, மலர் டீச்சராக இளசுகளின் மனசுகளில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர்தான் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சாய்பல்லவி 49 வயதான பவன் கல்யாணுடன் இணைந்து மலையாளத்தில் மெகா ஹிட்டான படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணைந்து நடிக்க உள்ளாராம். இந்தத் தகவலை கேட்ட சாய்பல்லவியின் ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

அதாவது மலையாளத்தில் பிரித்திவிராஜூம்  பீஜூ மேனனும் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான படம் தான் ‘ஐயப்பனும்  கோசியும்’. மேலும் மலையாள திரையுலகின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய இந்தப் படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பலர் இந்தப் படத்தை பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ள இந்த படத்தில் முன்னணி நடிகரான பவன் கல்யாணும்,அவருக்கு ஜோடியாக சாய் பல்லவியும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் கதைப்படி, ஐயப்பன் கதாபாத்திரம் , போராளி குணமுடைய மலை வாசி பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பார். இந்த தீவிரவாத பெண் கதாபாத்திரத்திற்கு தான் சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம்.

எனவே, இந்த கதாபாத்திரத்தில் அதிகமாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதால் சாய்பல்லவி இந்த படத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளாராம்.

இந்த செய்தியை கேட்ட சாய்பல்லவியின் ரசிகர்கள், ‘மலர் டீச்சர எங்களால தீவிரவாதியா யோசித்து கூட பார்க்க முடியாது’ என்று தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

sai-pallavi-cinemapettai

sai-pallavi-cinemapettai

Continue Reading
To Top