Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாய்ப்பு இல்லாததால் அந்த மாதிரி கதாப்பாத்திரத்திற்கு தள்ளப்பட்ட சாய்பல்லவி.. ஐயோ பாவம்!
Published on
கடந்த சில மாதங்களாக எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில் பிரபல நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாமல் சோகத்தில் இருக்கின்றனர்.
அந்த வகையில் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்க நடிகைகள் தயாராகிவிட்டனர்.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி.
பிரேமம் என்ற ஒற்றை படத்தின் மூலம் புகழ்பெற்ற சாய்பல்லவி தற்போது தொடர்ந்து முன்னணி நாயகியாக நன்றாக கல்லா கட்டி வருகிறார்.
ஆனால் அவருக்கு சமீபகாலமாக பெரிய அளவு பட வாய்ப்பு இல்லையாம்.
ஆதலால் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
தமிழில் அஜித் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

sai-pallavi
