Tamil Cinema News | சினிமா செய்திகள்
சாய்பல்லவி கல்யாண விஷயத்தில் எடுத்த முடிவு இதுதான்.. கண்கலங்கும் ரசிகர்கள்
தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வரும் தமிழ் நடிகை சாய் பல்லவி, தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் பிடித்தமான ஹீரோயினாக திகழ்பவர்.
இவர் நடிக்கும் படங்களில் எல்லாம், மேக்கப்பை பெருமளவு தவிர்த்து தனது இயல்பான தோற்றத்திலேயே நடித்து வருவது இவருடைய தனி சிறப்பு.
அண்மையில் கூட திருச்சிக்கு பரிட்சை எழுத வந்த போது தனது ரசிகர்களுடன் சர்வசாதாரணமாக செல்பி எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
முன்னணி ஹீரோயினாக சினிமாவில் உயர்ந்து நிற்கும் நடிகை சாய் பல்லவி, தமிழ்நாட்டில் சேர்ந்த நீலகிரி மலையில் உள்ள படுகா சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து விஜய் டிவியில் ‘உங்களில் யார் பிரபுதேவா’ நிகழ்ச்சியின் மூலம் டான்ஸராக அறிமுகமாகி அதன் பின் தற்போது நடிகையாக சினிமாவில் முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் அதற்கான காரணத்தையும் சாய் பல்லவி திடீரென்று வெளிப்படுத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
திருமணமானால் பெற்றோரை விட்டு பிரிந்து, கணவன் வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்படுவதால் கடைசி வரை என் பெற்றோருடன் திருமணம் செய்து கொள்ளாமலே அவர்களை கடைசி வரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
எனவே நான் திருமணம் செய்யப்போவதில்லை என சாய்பல்லவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சாய்பல்லவியின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். அவருடைய முடிவை மாற்றகொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான் வேணா வீட்டோட மாப்பிளையா வரட்டுமா? என்றும் சில ரசிகர்கள் தங்கள் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
