செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அமரன் வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி.. அரண்டு போன தயாரிப்பாளர்கள்

ஒரு நடிகை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், கிளாமராக தான் நடிக்க வேண்டும் என்ற எல்லா sterotype-களையும் உடைத்து எறிந்தவர் சாய் பல்லவி. சாய் பல்லவியின் முதல் படம் மலையாளத்தில் வெளியானாலும் அது தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சக்கைப்போடு போட்டது.

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து முதல் படத்திலேயே இளசுகளின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார் சாய் பல்லவி. அப்படத்திற்கு பின்னர் தான் அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் தமிழில் முதன்முதலில் நடித்த படம் தியா. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி இருந்தார்.

இப்படம் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து கமர்ஷியல் ரூட்டுக்கு திரும்பிய சாய் பல்லவி. தனுஷுக்கு ஜோடியாக மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். அந்த படத்தில், இவரது நடிப்பு, ஆட்டம் இரண்டும் மக்களின் மனதில் பதிந்தது.

இதை தொடர்ந்து தனது celebrity crush ஆன சூர்யா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. உடனே அவர் செம்ம குஷியாக நடிக்க ஒப்புக்கொண்டார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இவர் நடிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில், தனக்கு என்று ஒரு வட்டம் போட்டு, அந்த வட்டத்திற்குள் தான் நடிப்பேன் என்பதில் தெளிவாக இருந்தார்.

அந்த வகையில், கிளாமராக நடிக்க மாட்டேன், கதை நன்றாக இருந்தால் தான் நடிப்பேன், எனக்கு கதாபாத்திரம் ஸ்ட்ரோங் ஆக வடிவமைக்க பட்டாள் தான் நடிப்பேன் என்று தெளிவாக இருந்தார். அப்போது அவருக்கு அமரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதிலும் தீர ஆராய்ந்து, தனக்கு நல்ல ரோல் என்று தெரிந்த பிறகு தான் நடித்திருக்கிறார். இந்த படத்தில், சிவகார்த்திகேயன் விட இவர் ஒரு படி மேல் ஏறியே நடித்துவிட்டார் என்று சொல்லலாம். இந்த நிலையில் தற்போது பாலிவுட்டிலும் கலக்குகிறார். அதனால் தன் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.

அமரன் படத்துக்கு 3 கோடி சம்பளமாக பெற்ற சாய் பல்லவி, படத்தில் கிடைத்த வரவேற்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். அந்த வகையில், தற்போது தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். அவர் அடுத்து கமிட் ஆகும் படங்களுக்கு 6 கோடி சம்பளமாக பெறவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட தயாரிப்பாளர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News