Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூக்குத்தி அம்மன் நயன்தாரா கெட் அப்பில் சாய் பல்லவி- வைரலாகுது பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ

சாய் பல்லவி டான்சர், டாக்டர், ஹீரோயின் என தனது பன்முகத்திறமையால் அசத்துபவர். இந்தியாவில் பலருக்கு இவரை மலர் டீச்சராக தெரியும், ஆனால் நமக்கு சூப்பர் டான்சர் என்பது தான் முதலில் தெரியும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை தேர்ந்தெடுக்கும் நடிகை.

இன்று ரவுடி பேபியின் 29 வது பிறந்தநாள். சமூகவலைத்தளங்களில் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நானி நடிக்கும் “ஷியாம் சிங்கா ராய்” படக்குழு பல்லவியின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தீ பற்றி எரியும் சூலத்தோடு வித்தியாசமான கெட்டப்பில் உள்ள சாய் பல்லவியின் இந்த போட்டோ வைரல் ஆகியுள்ளது.

sai pallavi in shyam singha roy

பீரியட் ட்ராமா படம். இப்படத்தை ராகுல் சங்கரித்தியன் இயக்குகிறார். பெங்காலி வேடத்தில் நாயகன் நானி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். சமீபத்தில் இப்படக்குழு ஹைதராபாத் அருகில் கொல்கத்தா நகரம் போன்ற பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் நடத்தினர்.

ஒளிப்பதிவு ஷனு சான் வர்கீஸ், எடிட்டிங் நவீன் நூலி, இசை மிக்கி ஜே மேயர். இப்படத்தில் மடோனா செபாஸ்டின், கீர்த்தி ஷெட்டி, முரளி மனோகர், ஜிஷு சென் குப்தா, சத்யதேவ், ராகுல் ரவீந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Continue Reading
To Top