Connect with us
Cinemapettai

Cinemapettai

gargi-saipallavi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சாய் பல்லவியின் கார்கி எப்படி இருக்கு? ட்விட்டரில் அனல் பறக்கும் ப்ரிவியூ ஷோ விமர்சனம்

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் கார்கி. இதில் அவர் நீதிக்காக தனி ஒரு பெண்ணாய் போராடும் கேரக்டரில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தங்களுடைய 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகின்றனர். நாளை வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்த்த பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டு வருகின்றனர்.

gargi

gargi

சமீபகாலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய் பல்லவி இந்த படத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆடியன்சையும் பிரம்மிக்க வைத்து விட்டார். படத்தில் எமோஷனல் காட்சிகள் உட்பட ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஸ்கோர் செய்து விடுகிறார்.

gargi

gargi

அந்த வகையில் சாய்பல்லவிக்கு இந்த திரைப்படம் அவருடைய திரை வாழ்வில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த ரசிகர்கள் இயக்குனரை பாராட்டி வருகின்றனர்.

gargi

gargi

மேலும் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை வசனங்களின் மூலம் பளிச்சென்று காட்டி இருக்கும் இந்த திரைப்படம் இந்த வருடத்தின் சிறந்த படமாக இருக்கும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு கனமான கதாபாத்திரத்தை தாங்கி பிடித்திருக்கும் சாய் பல்லவிக்கு இந்த திரைப்படம் தேசிய விருதை நிச்சயம் பெற்று தரும்.

gargi

gargi

அந்த வகையில் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்று வரும் இந்த திரைப்படத்தில் குறை என்று சொல்வதற்கு எதுவுமே கிடையாது. அந்த அளவுக்கு இயக்குனர் தரமான ஒரு கதையை அழுத்தமாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சமூக கருத்து கொண்ட சிறந்த படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் சூர்யா இந்த படத்தை வெளியிட்டிருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

Continue Reading
To Top