Connect with us

Cinemapettai

Sai-Pallavi

Cinema News | சினிமா செய்திகள்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் சாய் பல்லவி..

பிரேமம் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சாய் பல்லவி.

Sai pallavi: பிரேமம் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சாய் பல்லவி. ஆனால் இப்படத்திற்கு முன்பு இவர் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடி அனைவரிடமும் அறிமுகமாகினார்.

அதன் பிறகு பகத் பாசிலுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். தற்போது அந்த திரைப்படம் திரைக்கு வர காத்திருக்கிறது. சமீபத்தில் சாய் பல்லவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

உங்களுடைய எதிர்கால கனவு என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு சாய் பல்லவி நான் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது தற்போது நிறைவேறி விட்டது.

அடுத்ததாக என்னுடைய ஆசை நான் படித்த டாக்டர் வேலையை செய்ய வேண்டும். அதாவது மருத்துவப்பணியில் ஈடுபட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய அடுத்த கனவு என பதிலளித்துள்ளார். சினிமாவில் கிடைத்த புகழை வைத்து மருத்துவ துறையிலும் வெற்றி பெற்றால் இன்னும் உச்சத்துக்கு செல்வார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top