பிரேமம் புகழ் நடிகை சாய் பல்லவி தற்போது இயக்குனர் விஜய் இயக்கும் கரு என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி கதை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது. அதை இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா இன்று மாலை வெளியிடவுள்ளார்.

இது சாய்பல்லவியின் முதல் தமிழ் படம் என்பதால் ரசிகர்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க ஹீரோயின் கதை. அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் கூட ஆகலாமாம். இனி பயப்பட வேண்டியது நயன்தாராதான்.