நடிகை சாய் பல்லவி கடந்த 2008ம் ஆண்டு தமிழில் வெளிவந்த தாம் தூம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து, 2015ம் ஆண்டில் மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த கரு படம் விரைவில் வெளிவர உள்ளது.

சமீபத்தில் வெளியான கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை பற்றி அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ” படம் எனக்கு பிடித்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில் என்னை அறியாமல் நான் அழுதுவிட்டேன். சிறந்த நடிகர்கள் தேர்வு, எதார்த்தமாக ரங்கூன் படம் இருந்ததாக அதில் தெரிவித்துள்ளார்.