தேசிய விருது இயக்குனருடன் கைகோர்க்கும் சாய்பல்லவி.. மாஸ்ஸாக வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. இவரை சாய் பல்லவி என்று அழைப்பதை விட மலர் டீச்சர் என்று அழைத்தவர்கள் தான் அதிகம். ஏனென்றால் இவர் மலையாள சினிமாவில் அறிமுகமான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். இந்த கேரக்டர் மலையாளம் மட்டுமின்றி அனைத்து தென்னிந்திய ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு கதாபாத்திரமாகும்.

தமிழ் நடிகையான சாய்பல்லவி தமிழைத் தவிர மற்ற மொழிகளில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தமிழிலும் தியா, மாரி 2, என்.ஜி.கே. உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு தமிழை விட மற்ற மொழிகளில் தான் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் சாய்பல்லவி தலை காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி பிரபல சேனல் ஒன்றில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் சாய்பல்லவியை எலிமினேட் செய்து வெளியே அனுப்பினார். அதன் பிறகே அவர் மலையாள சினிமாவில் நுழைந்து தற்போது வெற்றி பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் மட்டுமே தனது முத்திரையைப் பதித்த சாய்பல்லவி தற்போது முதல் முறையாக கன்னடத் திரையுலகிலும் கால் பதித்துள்ளார். அதுவும் தேசிய விருது பெற்ற இயக்குனர் மன்சூர் இயக்கும் புதிய படத்தில் சாய்பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sai-Pallavi
Sai-Pallavi

இதுமட்டுமின்றி இப்படத்தில் கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னதான் நடிகை சாய் பல்லவி மற்ற மொழி படங்களில் வெற்றி பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தாலும் தமிழ் மொழியில் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அது மட்டுமின்றி தமிழ் சினிமா ஒரு சிறந்த நடிகையை தவற விட்டு விட்டதாகவும் ரசிகர்கள் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News