மலையாளத்தில் நிவின்பாலி நாயகனாக நடித்த படம் பிரேமம். இந்த படத்தில் சாய் பல்லவி, மடோனா, அனுபமா என மூன்று நாயகிகள் நடித்தனர். அவர்களில் மடோனா, காதலும் கடந்து போகும், கவண், ப.பாண்டி என மூன்று தமிழ்ப் படங்களில் நடித்து விட்டார். அனுபமா, தனுஷின் கொடி படத்தில் நடித்தார். ஆனால் சாய் பல்லவி இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை. விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக தமன்னா நடித்து வருகிறார்.

அதையடுத்து, மலையாளத்தில் வெளியான சார்லி தமிழ் ரீமேக் படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்தை இயக்கயிருந்த டைரக்டர் ஏ.எல்.விஜய், வனமகன் படத்தை அடுத்து சார்லி ரீமேக்கை இயக்கு வதற்கு பதிலாக, கரு என்றொரு படத்தை இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சாய் பல்லவிதான் நாயகியாக நடிக்கிறாராம். மேலும், கரு படத்திற்கு பிறகு சார்லி ரீமேக் படத்தை இயக்குகிறாராம் ஏ.எல்.விஜய். அந்த படத்திலும் சாய் பல்லவிதான் நாயகியாம்.