வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

LCU-வில் இணைந்த குட்டி அனிருத்.. இனி ஏறுமுகம் மட்டும் தான்

கட்சி சேர என்ற மியூஸிக் வீடியோ மூலம் கவனம் பெற்றவர் சாய் அப்யங்கர். ஏராளமான பாடல்களில் தங்களது குரலால் கவர்ந்த திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகன் தான் சாய் அப்யங்கர். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதற்கேற்ப, இவர் இசைமைத்த ஆல்பம் எல்லாம் வேற லெவல் ஹிட் அடித்தது.

நெட்டிசன்கள், இவர் பாடல் வெளியிட்டாலே உடனே கிளிக் செய்து பார்ப்பதோடு, அதை ட்ரெண்ட் செய்து, தங்கள் காலர் ட்யூனாகவும் வைத்து வருகின்றனர். அதுமட்டுமா இவரது கியூட்டன்ஸ்-க்கு அடிமையானார்கள் ஏராளமான பெண் ரசிகைகள்.

லோகேஷ் படத்தில் கமிட் ஆன சாய் அப்யங்கர்

இந்த நிலையில் LCU கதையமாசத்துடன், பென்ஸ் படம் உருவாக்கி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிக்க லோகேஷ் கனகராஜ் தயாரிக்க, பாக்கியராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு, அதீத எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் மூலம் மியூசிக் டைரக்டர் ஆக அறிமுகமாகிறார் சாய் அப்யங்கர். அனிருத் போலவே, சினிமாவை பெரும் உயரத்தை அடைய எல்லா தகுதியும் உள்ள ஒருவர். குட்டி அனிருத் என்று ஏற்கனவே பலர் இவரை செல்லமாக அழைப்பார்கள்.

இப்படி பட்ட சூழ்நிலையில், தான் முதல் படமே வேற லெவல் தயாரிப்பு நிறுவனத்தில் இவருக்கு கிட்டியுள்ளது. தற்போது ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

- Advertisement -

Trending News