நான்கு படக்குழுவுக்கு நன்றிகளை பகிர்ந்த பிரபாஸ் மற்றும் சாஹோ தயாரிப்பு நிறுவனம். ஏன் தெரியுமா ?

பாகுபலி தொடந்து பிரபாஸ் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் சாஹோ. சுஜீத் இப்படத்தை இயக்குகிறார். சயன்ஸ் பிக்க்ஷனுடன், ஆக்ஷன் கலந்து, த்ரில்லர் ஜானரில் ரெடியாகி உள்ள இப்படத்தை uv கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மதி ஒளிப்பதிவு. ஷங்கர் இஷான் லாய் இசை. ஷ்ரத்தா கபூர், நீல் மிதுன் முகேஷ், லால், அருண் விஜய் ஜாக்கி ஷராஃ, வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படம் ஆகஸ்ட் 30 ரிலீசாகிறது. இப்படம் தனித்து ரிலீசானால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதனால், சில படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை மற்றயுள்ளனர். அதற்கு தான் நன்றிகளை பகிர்ந்துள்ளனர் தயாரிப்பு தரப்பு.

நானியின் காங் லீடர் – தெலுங்கு
சுஷாந்த் சிங்கின் சிச்சோரே – ஹிந்தி
சூர்யாவின் காப்பான் – தமிழ் , (தெலுங்கு)
கிச்சா சுதீப்பின் பயில்வான் – கன்னடம், (தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம்).

Leave a Comment