விக்கெட் கீப்பர்

இந்திய அணியில் சில பல காலமாகவே இந்த பொசிஷனுக்கு தகுதியானவர் யார் என்பது தான் ஹாட் டாபிக். டெஸ்டில் இருந்து தோணி விலக்கியபின்பு அந்த இடம் ரித்திமான் சாஹாவுக்கு சென்றது. அவரும் ஐந்து நாள் போட்டியில் இடத்தை தக்கவைத்தார்.

டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தோனி தான் கீப்பர். பலரும் தோனிக்கு வயதாகிவிட்டது, மேட்ச் இறுதியில் அடித்து ஜெயித்து கொடுக்கும் பினிஷெர் வேலையில் அவர் திறன் குறைந்து விட்டது என அவ்வப்பொழுது பேசுவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் சமீபத்தில் இலங்கையில் நடந்த நிதாஸ் கோப்பை பைனலில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி மேட்ச் ஜெயித்து கொடுத்ததும் அவர் தான் ஒரு நாள் போட்டிகளில் பினிஷெர் ரோலுக்கு ஏற்றவர் என கிரிக்கெட் வட்டாரத்தில் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டனர்.

சாஹா

மேற்குவங்க மாநிலத்தின் உள்ளூர் டி 20 போட்டி ஜே.சி. முகர்ஜி கோப்பை. அதில் நேற்று நடந்த லீக் போட்டியில் மோஹூன் பாகன் அணியும், பி.என்.ஆர் ரீக்ரியேஷன் கிளப் அணியும் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய மோஹூன் பாகன் அணி, 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிகம் படித்தவை:  வெயிலை சமாளிக்க ஒரு நகரத்துக்கே ஐஸ்க்ரீம் ட்ரீட் கொடுத்த பிரபல நடிகர்.!
Wriddhiman Saha

தொடக்க வீரரான ரித்திமான் சாஹா, 20 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், 14 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். அமன் பிரசோத் வீசிய 7-வது ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை சாஹா விளாசினார். அந்த ஓவரில் ஒரு வைட் வீசப்பட்டு, 37 ரன்கள் குவித்தனர். சஹாவின் ஸ்டிரைக் ரேட் 510.00 . 12 பந்துகளில் அரைசதம் கடந்தவர், அடுத்த 8 பந்துகளில் மீதமுள்ள 50 ரன்களை விளாசினார்.

Score Card

ஐபில் 11 வது சீசன் தொடங்க உள்ள நிலையில் சாஹா இவ்வாறு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.

போட்டிக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சாஹா, ‘ இந்த போட்டியில் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை முதல் பந்திலேயே நான் உணர்ந்தேன். இது சாதனையா என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் ஐபில் போட்டிகளை கருத்தில் கொண்டு வித்தியாசமான ஷாட்களை விளையாடத் முடிவுசெய்தேன். வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். டி20 போட்டியைப் பொறுத்தவரையில் துவக்க வீரராக களமிறங்கவே விரும்புகிறேன். ‘ என்றும் கூறியுள்ளார்.