Connect with us

Cinemapettai

விஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.

Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.

விஸ்வாசம்

தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று அனைவரும் முன்பு அறிந்ததே. எனினும் படத்தில் இல்ல எமோஷனல் காட்சிகள் பலரையும் கவர்ந்தது. குறிப்பாக பெற்றோர் குழந்தைகளின் உறவை வலுப்படுத்த செதுக்கப்பட்ட படம் என்றால் அது மிகையாகாது. தனது ஆசை, தன்னால் இயலாததை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என்ற மெஸேஜ் சொல்லும் படம்.

இந்நிலையில் முகநூலில், சென்னை காவல் துணை ஆணையர், ச. சரவணன் பதிவிட்ட பதிவு சுமார் 6000 லைக் 2400 ஷேர் பெற்று வைராலகி வருகின்றது. அவரின் பதிவு பின்வருமாறு ..

police

A leader is someone who demonstrates what’s possible.

சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .

படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது. கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது.

viswasam

பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.

விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் .

என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
தலைமையிடம்
சென்னை மாநகரம்

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

இதுபோன்று பதிவு, விபத்துகளின் விபரீத்தையும் பாதுகாப்பின் அவசியத்தையும் உணர வைக்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை. புரளி பேச, அடுத்தவரை கலாய்க்க என்று மட்டுமன்றி, இது போன்ற விழிப்புணர்வுக்கும் சமூகவலைத்தளங்கள் உதவும் என்பதை புரிய வைத்த போலீசுக்கு சினிமாபேட்டையின் சல்யூட்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top