fbpx
Connect with us

பாலியல் தொழிலாளியாக மாறினார் நடிகை சதா.! இயக்குனர் வெளியிட்ட பரபரப்பு தகவல்.!

News | செய்திகள்

பாலியல் தொழிலாளியாக மாறினார் நடிகை சதா.! இயக்குனர் வெளியிட்ட பரபரப்பு தகவல்.!

சதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ் தெலுங்கு கன்னட மொழிப்படங்களை நடித்துள்ளார்.இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும்.

sadha

தெலுங்கு, தமிழ் என 50 படங்களுக்குமேல் நடித்தவர் சதா. ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார்.

தற்போது அவர் டார்ச் லைட் என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். விஜய் நடிப்பில் தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்குகிறார், புதுமுகம் உதயா, ரித்விகா, ஏ.வெங்கடேஷ், சுஜாதா, உள்பட பலர் நடிக்கிறார்கள்.

sadha

இது பற்றி இயக்குனர் அப்துல் மஜீத் கூறியதாவது:

பாலியல் தொழிலுக்கு எந்த பெண்ணும் விரும்பி வருவதில்லை. வறுமையாலும், துரோகத்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் அதற்குள் தள்ளப்படுகிறார்கள்.

Sadha

அந்த சூழ்நிலைகளை சமாளித்து எப்படி பாலியல் தொழிலுக்கு செல்லாமல் தப்பிக்கலாம் என்று பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் தயாராகி வருகிறது.

நிறைய நடிகைகளிடம் இந்த கதையை கூறியும் அவர்கள் நடிக்க மறுத்து விட்டனர். இமேஜ் போய்விடும் என்றனர். கடைசியாக சதாவிடம் கதை சொன்னபோது இது போன்ற படங்கள் சமூகத்துக்கு அவசியம் தேவை என்ற கூறி நடிக்க ஒப்புக் கொண்டார் என்றார் அப்துல் மஜீத்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top