மூன்று ஆண்டுகளாய் கிடப்பில் கிடந்தது ஒரு வழியாக நாளை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் புரியாத புதிர். இப்படத்தின் பெயர் மெல்லிசை என்று வைக்கப்பட்டிருந்தது ஆனால் சில சென்டிமென்ட் காரணங்களுக்காக புரியாத புதிர் என பெயர் மாற்றப்பட்டது அனைவரும் அறிந்ததே.

தற்போது இந்த படத்தை நாளை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளனர். இதனால் முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் அனைத்தும் செப் 7ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஏன் இந்த தடை என்று விசாரித்தால் பெப்ஸி சங்கத்தின் பொதுசெயலாளர் அங்கமுத்து அவர்களால் படத்தில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு 23 லட்சம் ரூபாய் பாக்கி தரவேண்டி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முதலில் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தற்போது இழுத்தடிப்பதனால் வழக்கு தொடர்ந்ததாக அங்கமுத்து தெரிவித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கி தொகை தரும்வரை படத்தை தற்காலிகமாக வெளியிட தடை விதித்துள்ளார்.

இதனால் படக்குழு வருத்தத்தில் உள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படம் வெளிவருவதால் விஜய்சேதுபதியும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியில் இப்படியாகிவிட்டது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இதுக்கு பேரை மாத்தாமலேயே இருந்திருக்கலாம்.