இளைய தளபதியின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவருடைய பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளதால் ரசிகர்கள் போஸ்டர், பேனர் என கொண்டாடி வருகின்றனர்.

பல ரசிகர்கள் இரத்ததானம், அன்னதானம் செய்தும் நற்பணிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் பிறந்தநாள் அன்று தமிழகத்தில் பல திரையரங்குகளில் இவருடைய படம் திரையிடப்படும்.

இதில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் தற்போது ஓடும் படங்களின் ஒப்பந்தம் காரணமாக விஜய் படம் திரையிட முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளனர்.

இவை விஜய் ரசிகர்களிடம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு நடந்து வருகிறது.