இந்தூர்: கிரிக்கெட்டை சச்சின் விட்டாலும், சச்சினை ரசிகர்கள் விடுவதாக இல்லை.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த 22வது லீக் போட்டியில், மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

 

தெறிக்கவிட்ட ரசிகர்கள்:
இப்போட்டி மகாராஷ்டிராவின் இந்தூரில் நடந்ததால், மைதானத்தில் பெரும்பாலும் மும்பை ரசிகர்கள் அதிகமாக காணப்பட்டனர். போட்டி துவங்கியதும் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை விட, மும்பை அணியின் ஆலோசகரான சச்சினுக்கே ஆதரவு அதிகமாக காணப்பட்டது.

ஒன்றுபட்ட இந்தியன்:
மும்பை, பஞ்சாப் என இரு அணிகள் பங்கேற்றபோதும், மும்மை ரசிகர்கள் சச்சின்….சச்சின்….. என கோஷம் போடத்துவங்கிய பின், பஞ்சாப் ரசிகர்களும் அவர்களுடன் சேர்ந்து கோஷமிட ஒட்டு மொத்த மைதானமே நிலநடுக்கம் வந்தது போல அதிர்ந்தது. எல்லா திசைகளிலும் சச்சின் பெயர் மட்டுமே எதிரொலித்தது. இது ரசிகர்கள் மனதில் இருந்து சச்சின் இன்னும் நீங்கவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் இருந்தது.