Connect with us

Cinemapettai

டிப்ஸ் கொடுத்த சென்னை ஹோட்டல் வெய்ட்டர்- சந்திக்க உதவுங்கள்.. தமிழில் வேண்டுகோள் வைத்த சச்சின்..

Sports | விளையாட்டு

டிப்ஸ் கொடுத்த சென்னை ஹோட்டல் வெய்ட்டர்- சந்திக்க உதவுங்கள்.. தமிழில் வேண்டுகோள் வைத்த சச்சின்..

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு உலகளவில் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது, இன்றும் உள்ளது. டீ கடை பையன் முதல் டாப் கம்பெனி CEO வரை தன் ஆட்டத்தின் வாயிலாக கவர்ந்தவர். இந்நிலையில்  சச்சின் சுவாரஸ்ய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் மக்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்துள்ளார்.

ஒருமுறை டெஸ்ட் போட்டிக்காக சென்னை வந்திருந்தபோது தாஜ் ஹோட்டலில் தங்கினாராம். அங்கு காபி கொடுக்க வந்த வெயிட்டர், உங்களிடம் கிரிக்கெட் பற்றி பேச வேண்டும் என்றாராம். இவரும் ஓகே சொல்ல, நீங்கள் முழங்கையில் கட்டியிருக்கும் பேடை அணிந்து ஆடினால், பேட்டை வீசும் முறை மாறுகிறது . உங்களுடைய பேட் ஸ்பீட் குறைகிறது என்றாராம்.

இந்த விஷயத்தை சச்சின் கவனித்திருந்தாராம், ஆனால் யாரிடமும் சொன்னது இல்லையாம். பின்னர் தான் தனது elbow guard டிசைனை மாற்றினாராம் சச்சின். இதோ அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் போஸ்ட். இந்நிலையில் இந்த ஆலோசனையை சொன்ன அந்த நபரை தான் தேடுவதாகவும் அவரை சந்திக்க ஆசைப்படுவதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top