ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது சச்சினின் யுகாதி/குடிபாட்வா கொண்டாட்ட போட்டோ !

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் விளையாட்டில் தீரா ஆர்வம் கொண்ட சச்சின், கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்றார். பள்ளிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில் இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்தது இன்றளவும் பெருமையாக பேசப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக தனது 16-வது வயதில் களம் இறங்கி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது முதல், கிரிக்கெட் வரலாற்றில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்ததுடன், சரித்தர சாதனையும் படைத்து எவராலும் அசைக்க முடியாத கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்தார் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் என ஏராளமான சாதனைகளைப் படைத்தவர்.

மாநிலங்களவை நியமன உறுப்பினராக கடந்த 2012-ஆம் ஆண்டில் தேர்ந்தேடுக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், பாரத ரத்னா, பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கவுரவ கேப்டன் என ஏராளமான விருதுகளுக்கும், கவுரவங்களுக்கும் சொந்தக்காரர்.

இந்நிலையில் இவர் மஹாராஷ்டிராவில் தன் குடும்பத்துடன் குடிபாட்வா கொண்டாடியதை தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டார்.

sachin – Anjali – Arjun TENDULKAR

இவர் தன் மனைவி அஞ்சலி மற்றும் மகன் அர்ஜூனுடன் உள்ள போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. பல ரசிகர்கள் மகள் சாரா இல்லையே என்று வேறு கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Comments

comments

More Cinema News: