சூப்பர் ஸ்டாரை தலைவா என புகழ்ந்த சச்சின்.. காட்டுத் தீயாய் பரவும் ட்விட்டர் பதிவு

சச்சின் டெண்டுல்கரை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் குறித்து பள்ளி பாட புத்தகத்தில் ஒரு பாடமே இடம் பெற்றுள்ளது. அந்த அளவிற்கு தனது துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கர் தற்போது நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரைப்பணியை பாராட்டும் விதமாக மத்திய அரசால், சமீபத்தில் நடிகர் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவே சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறியிருப்பதாவது, “ஒவ்வொரு முறையும் தங்கள் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக்குறைவு. தலைவர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அதை செய்கிறார். தொடர்ந்து தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவருகிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறையில் ரஜினி எப்படி சிறந்து விளங்குகிறோரோ அதை போலவே கிரிக்கெட் துறையில் சிறந்து விளங்கிய வீரர் தான் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிகாந்தின் ஒரு தீவிர ரசிகனாக அவருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகள் தெரிவித்துள்ள ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

sachin-rajini
sachin-rajini

இதுதவிர ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அதே மேடையில் தான் அவரது மருமகனும், முன்னணி நடிகருமான தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். ஒரே மேடையில் மாமனாரும், மருமகனும் விருது பெற்றுள்ள நிகழ்ச்சி மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ரஜினி குடும்பத்திற்கு அமைந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்