fbpx
Connect with us

Cinemapettai

சச்சினுக்கே டிமிக்கி கொடுத்த ஆஸ்திரேலிய நிறுவனம்.! சச்சின் எடுத்த அதிரடி முடிவு

sachin

Sports | விளையாட்டு

சச்சினுக்கே டிமிக்கி கொடுத்த ஆஸ்திரேலிய நிறுவனம்.! சச்சின் எடுத்த அதிரடி முடிவு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து 10லட்சம் டாலர் ராயல்டி தொகை கோரி சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது பெயரையும் பயன்படுத்தி வருவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஆண்டுக்கு 10 லட்சம் $  தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது .கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்த நிறுவனம் ஒப்பந்தம் படி தொகையைத் தர மறுத்து வருவதாகவும் அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு முறையான விளக்கம் அளிக்காமல் காலம் கடத்தி வருவதாகவும் மேலும் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிறுவனத்தின் மீது ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தோனியின் ,ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இதே கம்பெனியின் மீது சிட்னி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top