Connect with us
Cinemapettai

Cinemapettai

வர வர தோனியின் ஆட்டம் மிக மோசம்.. சச்சின் கூறியதால் பரபரப்பு.. ஆதரவாக ரசிகர்கள் நிற்பார்களா?

sachin-ms-dhoni

Sports | விளையாட்டு

வர வர தோனியின் ஆட்டம் மிக மோசம்.. சச்சின் கூறியதால் பரபரப்பு.. ஆதரவாக ரசிகர்கள் நிற்பார்களா?

நடந்து வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில், வர வர தல தோனி மிக மோசமாக விளையாடி வருவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

நேற்று இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தது.

நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் நன்கு பவுலிங் மற்றும் பீல்டிங் செய்து இந்தியாவை முதல் கட்டத்தில் திணறடித்தது. 225 ரன்களை இலக்காக எடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஆட்டம் முடிந்தபின் பேசிய சச்சின் ‘தல தோனி உடன் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் பார்ட்னர்ஷிப் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும், மிக மோசமான ஆட்டத்தை ஆடியதாக’ தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை குறைவாக எடைபோடாதே என்று சொன்னதற்கு இதான் காரணம் என்றும் அதற்காக நன்கு அனுபவித்து விட்டனர் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இறுதி வரை ரசிகர்களை மிகப் பரபரப்புடன் நடந்து முடிந்த இந்த போட்டி பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. தல தோனி வரும் ஆட்டங்களில் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் இல்லையெனில் உலக கோப்பையை பெறுவது கடினம் என்றும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top