Sports | விளையாட்டு
இந்திய அணியில் இடம் பெற்றார் சச்சின் மகன். ஆச்சரியத்தில் ரசிகர்கள்
இந்திய அணியில் இடம் பெற்றார் சச்சின் மகன்:
கிரிக்கெட் வீரர்களின் கடவுள் சச்சின் டெண்டுல்கார் மகன் அர்ஜூன் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.
கிரிக்கெட் தெரிந்த எந்த மொழி ரசிகர்களுக்கும் சச்சினை தெரியாமல் இருக்கவே இருக்காது. விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் சச்சின் ஒரு கடவுள். 6 அடிக்கும் குறைவான உயரத்தில் அவர் களத்தில் பேட்டை பிடித்தால் எதிரணியில் அனைவருக்கும் பயம் இருக்கத்தான் செய்யும். சச்சினின் விக்கெட்டை தூக்கி விட்டால் கண்டிப்பாக வெற்றி நமக்கு தான் என எல்லாருக்குமே ஒரு தைரியம் இருக்கும். அப்படி ஒரு வீரராக இருந்தவர் சச்சின். இவரின் மகன் அர்ஜூன் டெண்டுல்காரும் கிரிக்கெட்டில் அசாத்திய திறமை படைத்து இருக்கிறார்.
ஆனால், தந்தையை போல அர்ஜூன் பேட்ஸ்மேன் மட்டும் இல்லை. இடக்கை பந்து வீச்சாளரும் கூட. தந்தையை போல கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருக்கும் அர்ஜூன் சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறார். அப்பா சச்சின் தனக்கு உதவியாக இருந்தார். ஆனால், எந்த இடத்திலும் தன்னை கிரிக்கெட் என்று கட்டாயப்படுத்தியதே இல்லை என அர்ஜூன் எப்போதுமே குறிப்பிடுவார்.
அர்ஜூன் கடந்தாண்டு நடந்த கூச் பெஹர் கோப்பை போட்டியில் இரண்டு முறை தலா 5 விக்கெட்கள் மற்றும் ஒரு முறை நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். பந்து வீச்சை போல பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். இந்தாண்டு ஜனவரியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 பந்துகளில் 48 ரன்கள் குவித்ததுடன், நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இந்நிலையில், அர்ஜூன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்று இருக்கிறார். ஜூலை மாதம் இலங்கை செல்லும் இந்திய அணி, அங்கு இரண்டு நான்கு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து ஒருதினப் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த ஆண்டு முதல் 19 வயதுக்கு உள்ள வீரர்களை தவிர வயது அதிகமான வீரர்களை எடுக்க கூடாது என பயிற்சியாளர் டிராவிட் கடுமையான கட்டளைகளை பிறப்பித்து இருக்கிறார். இதனால், அர்ஜூனை விட சிறப்பான வீரர்கள் இருந்தும் வயதின் அடிப்படையில் அர்ஜூன் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்கள் பலர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
