Sports | விளையாட்டு
7 வருடம் கழித்து ரகசியத்தை உடைத்த சச்சின் டெண்டுல்கர்.. லாரா, கெயில் பற்றி வெளியிட்ட வைரல் வீடியோ!
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர். அவர் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து பிரியாவிடை பெற்றார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் இவர் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படுகிறார்.
1989 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2013 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய இவர், கிரிக்கெட் உலகில் தனி முத்திரை பதித்தவர்.
18 வயதில் அறிமுகமானவர் சச்சின் டெண்டுல்கர், மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்களை குவித்துள்ளார் , அதில் 51 சதங்கள் மற்றும் 68 அரைசதங்கள் அடங்கும்.
தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து தான் ரிட்டையர் ஆன நாளில், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாரா மற்றும் கெயில் ஆகியோர் அளித்த நினைவு பரிசு குறித்து மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

sachin-lara-1
