Connect with us
Cinemapettai

Cinemapettai

கங்குலியை கிரிக்கெட்டை விட்டு துரத்த முயன்ற சச்சின்.. தாதாவை கண்டபடி திட்ட காரணம் இதுதான்!

sachin-ganguly-cinemapettai

Sports | விளையாட்டு

கங்குலியை கிரிக்கெட்டை விட்டு துரத்த முயன்ற சச்சின்.. தாதாவை கண்டபடி திட்ட காரணம் இதுதான்!

உலகளவில் சச்சின் மற்றும் கங்குலி ஜோடி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். தற்போது வரை 176 இன்னிங்ஸ்களில் 8, 200-க்கும் மேல் ரன்களை குவித்து ஒரே கூட்டணி இவர்கள் தான்.

கேப்டனாக இருக்கும் போது இவர்களுக்கு இடையே பல பிரச்சினைகள் நடந்துள்ளது. அதில்  சச்சினை விட கேப்டன்சிப்பில் சவுரவ் கங்குலி பல வெற்றிகளை தட்டி துக்கியவர், அந்த வகையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

தற்போது வரை அந்த தலைமை பொறுப்பை மறக்காமல் ஏற்று BCCI-யிலும் தலைவர் பொறுப்பிலும் உள்ளார். ஆனால் சச்சின் உலக அளவில் சிறந்த ஆட்டக்காரராக இருந்தாலும் கேப்டன் சிப்பில் அவரால் கங்குலி அளவுக்கு சமாளிக்க முடியவில்லையாம்.

1997 ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் படு மோசமான தோல்வியை தழுவியது இந்தியா.

அப்போது கேப்டன் சீப்பில் இருந்த சச்சின் அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறும் நேரத்தில் சௌரவ் கங்குலி அதனை அசால்டாக எடுத்துக் கொண்டாராம்.

கோபத்தில் சச்சின் இன்றுடன் உன் கிரிக்கெட் கேரியரை முடித்து வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்று திட்டி உள்ளாராம். இதனை பிரபல பத்திரிகையாளர் விக்ரம் குப்தா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஜாம்பவான்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த சுவாரசியமான சம்பவத்தை கேட்டு ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top