Connect with us
Cinemapettai

Cinemapettai

தரமான ஸ்கெட்ச் போட்டு தூக்குறாருங்க- சச்சினின் பாராட்டை பெற்ற இந்திய பௌலர் யார் தெரியுமா

Sports | விளையாட்டு

தரமான ஸ்கெட்ச் போட்டு தூக்குறாருங்க- சச்சினின் பாராட்டை பெற்ற இந்திய பௌலர் யார் தெரியுமா

இந்திய டீம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ளது நாம் அனைவரும் அறிந்த செய்தியே. ஆஸ்திரேலிய- இந்திய டீம்கள் மோதும் பார்டர் காவஸ்கர் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவதில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளார். எனவே உலக கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை அதிகம் பெற்றுள்ளது இந்த டெஸ்ட் போட்டிகள்.

பந்துவீச்சில் கலக்கினாலும் பேட்டிங்கில் சற்றே சொதப்பி வருகிறது ஆஸ்திரேலியா. இதற்கு முக்கிய காரணம்  ஸ்மித் தடுமாறுவது தான். ரன்குவிப்பு மெஷின் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித் 4 இன்னிங்சில் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் அஸ்வின் பந்தில் இரண்டு முறை அவுட் ஆகியுள்ளார்.

ashwin smith

இந்த சீரிஸ் அஸ்வின் vs ஸ்மித் என மாறியுள்ளது. இந்த போட்டியில் உள்ள போட்டி பற்றி பின்வருமாறு சொல்லியுள்ளார் சச்சின்.

“முதல் டெஸ்டில் அஸ்வின் ஆர்ம் பால் (பந்தின் மேற்பகுதியில் விரல் படாமல்) போட்டு ஸ்மித்தை வெளியேற்றினார். அது புதுமையாக இருந்தது. அடுத்த டெஸ்ட் மேட்சில் பந்தின் மேற்பகுதியில் விரலை வைத்து அழுத்தி பந்துவீசினார். இதனால் பந்து பவுன்ஸ் ஆனது, இதனை அறியாத ஸ்மித் எப்போதும் போல் விளையாடினார். ஆனால், அஸ்வின் சரியான பிளானிங் செய்து பீல்டரை நிற்கவைத்து அவுட் ஆக்கினார். இரண்டு உலகத் தரம் வாய்ந்த வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் அஸ்வின் வென்றுவிட்டார்” எனத் தெரிவித்தார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top