Connect with us
Cinemapettai

Cinemapettai

எந்த காலத்துலயும், எந்தத் துறையிலும் குறுக்கு வழியைத் தேடாதே தனது மகனுக்கு அறிவுரை கூறிய சச்சின்.!

sachin

Sports | விளையாட்டு

எந்த காலத்துலயும், எந்தத் துறையிலும் குறுக்கு வழியைத் தேடாதே தனது மகனுக்கு அறிவுரை கூறிய சச்சின்.!

24 வருடமாக கிரிக்கெட் உலகத்தில் ஜாம்பவானாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலகத்தில் பல அறியாத வரலாற்று சாதனை படைத்துள்ளார், இந்திய அணிக்காக அயராது பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர்.

மேலும் இவர் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் என பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் கிரிக்கெட் உலகத்தில், இந்த நிலையில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் வீரராகவே உருவாக்கியுள்ளார்.

பொதுவாக கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகள் கிரிக்கெட் வீரராக இருந்தால் எளிதாக அணியில் இடம் கிடைத்துவிடும் அது மட்டுமல்லாமல் பல சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்கும் என பலர் கூறுகிறார்கள், மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு பல சலுகை என்றார் சச்சின் மகனுக்கு சொல்லவா வேண்டும்.என  பல விமர்சனங்கள் எழுகின்றன.

விமர்சனங்களுக்கு சச்சின் தக்க பதிலடி கொடுத்துள்ளார் சமீபத்தில் சச்சின் கூறியதாவது எனது  மகனாக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டும் தான் வாய்ப்பு வேறு எதையும் பயன்படுத்தி வாய்ப்பு வாங்கிக் கொடுக்கும் ஆள் கிடையாது நான், அதுமட்டுமில்லாமல் “எந்த துறையாக இருந்தாலும் நேர்மையான வழியில் தான் செல்ல வேண்டும் குறுக்கு வழியில் செல்ல கூடாது.

இதை என் அப்பா என்னிடம் கூறினார் நான் எனது மகனிடம் கூறியுள்ளேன் என தெரிவித்தார் இதன்மூலம் சச்சின் தனது செல்வாக்கை பயன்படுத்தி எதையும் செய்யவில்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top