fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கோலி, ரஹானே- யார் சிறந்த கேப்டன்? சச்சினின் அதிரடி பதில் இது தான்

Sports | விளையாட்டு

கோலி, ரஹானே- யார் சிறந்த கேப்டன்? சச்சினின் அதிரடி பதில் இது தான்

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு டீம்களும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளனர், சிட்னி நகரில் மூன்றாவது போட்டி நடக்கவுள்ளது. முதல் போட்டி முடிந்த பின்பு கேப்டன் கோலி இந்தியா திரும்பிவிட்டார். எஞ்சிய போட்டிகளுக்கு ரஹானே அவர்களை கேப்டனாக நியமித்தனர்.  தோல்வியை சந்தித்த இந்திய டீம்மை தன்னம்பிக்கையுடன் வழி நடத்தி வெற்றி பெற வைத்தார். அசத்தலாக சதமும் அடித்தார்.

கோலியிடம் வீரர்களுக்கு பயம் தான் இருந்தது. ஆனால் ரஹானேவிடம் நட்பு உள்ளது, எனவே இந்திய அணியின் கூட்டு முயற்சியில் கிடைத்த மாபெரும் வெற்றி என பலரும் பேச ஆரம்பித்தனர். யார் டீமுக்கு பெஸ்ட் கேப்டன் என்பது போல ஊடகங்களும் பேச ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இது பற்றி சச்சின் பின்வருமாறு சொல்லியுள்ளார்.  “விராட் கோலியுடன் ரஹானேவை ஒப்பிடக்கூடாது. ரஹானே வித்தியாசமான கேரக்டர். அவரது நோக்கமும் எண்ணமும் ஆக்ரோஷம் உடையதாக இருக்கும், ஆனால் அதை வெளிப்படையாக தனது உடல்மொழியில் காட்டமாட்டார். நான் அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புவது ஒன்றே ஒன்று தான். கோலி, ரஹானே ஆகிய இருவருமே இந்தியர்கள், இந்தியாவிற்காக விளையாடுகிறார்கள். நாட்டிற்காக ஆடும் பொழுது, எந்த தனிநபரையும் முன்னிறுத்தக் கூடாது. நாடு மற்றும் தேசிய அணி ஆகியவற்றிற்கு முன் யாருமே பெரிது கிடையாது.” என சொல்லியுள்ளார்.

Rahane-Cinemapettai.jpg

Rahane-Cinemapettai.jpg

ரஹானேவின் பேட்டிங் பற்றி பேசிய சச்சின், “ஆக்ரோஷச மனநிலையை அமைதி, மனவுறுதி மூலம் வென்றுள்ளார். சொதப்பலான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுவது, நல்ல பந்துகளை எதிர்கொள்ளும்போது தடுப்பாட்டத்தை கடைப்பிடிப்பது என அவரின் பேட்டிங் உண்மையில் சிறப்பாக இருந்தது. அணியை திறம்பட வழிநடத்தினார்” என்றார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top