Sports | விளையாட்டு
ரோஜா படம் பார்க்க சென்ற சச்சினுக்கு நேர்ந்த அனுபவம்..
ரோஜா படம் பார்க்க சென்ற சச்சின் டெண்டுல்கருக்கு ரசிகர்களால நேர்ந்த அனுபவம் பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படுபவர் சச்சின். இவர் உயரம் கம்மி என்றாலும் சாதனை உயரம் கணக்கில் அடங்காதவை. சச்சின் அவுட்டா? அப்போ டிவி ஆப் பண்ணு என்பதே பல வீடுகளில் வழக்கமாக கேட்கப்படும் வசனமாக மாறியது. ஒரு டீம் வெற்றியையே இவர் மேல் தொடர்ந்து வைக்கப்பட்டது. அதனையும் செய்து முடிக்க கூடியதே சச்சின் ஸ்டைல். தன்னை விட பெரிய வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
சச்சினுக்கு ரசிகர்கள் எக்கசக்கம் என்பதால் பொது வெளியில் வருவதை தவிர்த்து விடுவார். சச்சினை அங்கு பார்த்தோம், இங்கு பார்த்தோம் என எந்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் பரவியது இல்லை. ஆனால், வெளியில் மாறுவேடம் போட்டு சென்ற சச்சினுக்கும் ஒரு சுவாரசிய அனுபவம் கிடைத்திருக்கிறதாம்.
சச்சின் டெண்டுல்கர், கௌரவ் கபூர் தொகுத்து வழங்கும் “பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” எனும் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். அதில் தன் சொந்த அனுபவங்கள், கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பேசிய சச்சின், திரையரங்கில் படம் பார்க்க வேண்டும் என்பது எனக்கு பல நாட்கள் கனவாகவே இருந்தது.
என் ரசிகர்கள் என்னை பொதுவெளியில் பார்த்தால் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் அதை என்னால் செய்ய முடியாமலே இருந்தது. எனக்கும், அஞ்சலிக்கு திருமணம் முடிந்திருந்த சமயம், படத்திற்கு போகலாம் என முடிவெடுத்தோம். ஆனால், ரசிகர்கள் பார்த்து விடுவார்களோ என பயப்பட்டேன். இதற்கு என் மனைவியும், நண்பர்களும் ஒரு ஐடியாவை கண்டுப்பிடித்தனர்.
அதன்படி, ஒட்டுத்தாடி, கண்ணாடி, தொப்பி அணிந்து கொண்டு எல்லாருடனும் திரையரங்குக்கு சென்றேன். இடைவேளை வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. இடைவேளை சமயத்தில், வெளியில் சென்றோம். அப்போது, என் கண்ணாடி கீழே விழுந்து ஒரு பக்கம் உடைந்து விட்டது. அதை போட்டுக்கொண்டு திரையரங்கினுள் சென்ற என்னை ஒரு ரசிகர் கண்டுபிடித்து விட்டார்.
அச்செய்தி திரையரங்கு முழுவதும் பரவியது. ஆனால், நல்லவேளையாக சமூக வலைத்தள ஆதிக்கம் இல்லாத காரணத்தால் அன்று பெரும் கூட்டத்தில் சிக்காமல் தப்பினேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
