Connect with us

Cinemapettai

பயிற்சி வீடியோவை பதிவிட்ட சச்சின். கிண்டல் செய்த ஐசிசி, பங்கமாய் திருப்பி கலாய்த்த டெண்டுல்கர் .

Sports | விளையாட்டு

பயிற்சி வீடியோவை பதிவிட்ட சச்சின். கிண்டல் செய்த ஐசிசி, பங்கமாய் திருப்பி கலாய்த்த டெண்டுல்கர் .

சச்சின் தன் ஓய்வுக்கு பின்னும் நேரடியாக கிரிக்கெட்டுடன் தொடர்பில் உள்ளது தன் கிரிக்கெட் அகாடமி, மும்பை இந்தியன்ஸ் வாயிலாக தான். இந்நிலையில் மனிதர் சமீபத்தில் தன் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

அகாடமி லஞ்ச் பிரேக் சமயத்தில் வினோத் காம்பிலியுடன் நெட் – ப்ராக்டிஸ் செய்யும் வீடியோ. சிவாஜி பார்க் சிறு வயது நினைவுகளை ஞாபகப்படுத்தியது. காம்பிலியும் நானும் ஒரே அணியில் விளையாடியிருக்கிறோம். எதிர் எதிர் டீம்மில் ஆடியது இல்லை அது சிலருக்கு மட்டும் தான் தெரியும். என பதிவிட்டிருந்தார்.

இந்த டீவீட்டுக்கு ஐசிசி குசும்பாய் பதில் ட்வீட் போட்டனர். அதில் சச்சின் கோடு தாண்டி பந்துவீசுவதையும், அம்பயர் ஸ்டீவ் பக்னர் நோ பால் காமிப்பதை படத்துடன் சுட்டிக்காட்டி இருந்தனர்.

( சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்த காலத்தில் இவர் பல முறை தவறான முடிவை அறிவித்து பலரின் வயித்தெரிச்சலை கொட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் சச்சினும் கிண்டலாய் தான் பதில் தட்டினார். “ஏதோ இந்த முறையாவது நான் பேட்டிங் செய்யாமல் பவுலிங் செய்கிறேன். நடுவரின் முடிவே இறுதியானது’ என்பதே அது.

இது பலரின் லைக்ஸ் குவித்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top