fbpx
Connect with us

Cinemapettai

நேற்றைய போட்டியில் ஒரு ரன் எடுத்தும் சாதனை படைத்த தோனி.. இன்னும் ஒரு ஆள்தான் பாக்கி

dhoni-records

Sports | விளையாட்டு

நேற்றைய போட்டியில் ஒரு ரன் எடுத்தும் சாதனை படைத்த தோனி.. இன்னும் ஒரு ஆள்தான் பாக்கி

Ms Dhoni: நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ஒரு ரன் எடுத்தாலும் தோனி டிராவிட்டை பின்னுக்கு தள்ளி ஒரு சாதனையை படைத்து இருக்கிறார். அதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனை பற்றிய செய்தியை பார்க்கலாம்.

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் விளையாடியதில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றியை தன் வசப்படுத்தியது. இந்திய அணியை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் 212 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடினர்.

இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிகம் விளையாடிய வீரர்களில் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி தோனி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலிடத்தில் சச்சினும் 463 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ராகுல் டிராவிட் 340 ஆட்டங்களில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் தோனி அவரை பின்னுக்குத் தள்ளி 341 ஆட்டங்கள் விளையாடி தற்போது அந்த இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதன்மூலம் சச்சினுக்கு பிறகு அதிக ஆட்டங்கள் ஆடியது தோனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

dhoni

dhoni

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top