fbpx
Connect with us

Cinemapettai

விஜய் சங்கர் என்ன பாவம் பண்ணினார் சச்சின்.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

sachin-vijay-shankar

Sports | விளையாட்டு

விஜய் சங்கர் என்ன பாவம் பண்ணினார் சச்சின்.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதின இதில் இந்தியா அதிரடியாக விளையாடி பாகிஸ்தானை வென்றது. அதனைப் பற்றி சச்சின் ஒரு கருத்து தெரிவிக்கையில் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணியினர் பலரும் சிறப்பாக விளையாடினார். அதில் குறிப்பாக விஜய் சங்கர், ரோகித் சர்மா, கோலி, கேஎல் ராகுல்,பாண்டியா  என அனைவரும் நன்றாக விளையாடினர்.

இந்நிலையில் இந்தியாவின் வெற்றியை புகழ்ந்து சச்சின் ட்விட்டரில் ஒரு கருத்து தெரிவித்தார். அந்த ட்வீட்டில் ராகுல், பாண்டியா என அனைவரும் இருந்தனர். ஆனால் அந்த வரிசையில் விஜய் சங்கர் பெயர் இடம் பெறவில்லை.

நேற்றைய போட்டியில் விளையாடிய விஜய் சங்கருக்கு முதல் உலக கோப்பை போட்டியில் முதல் பந்தில் விக்கெட் எடுத்து அசத்தினார். மேலும் முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, எல்லாரையும் விட குறைவான ரன்கள் கொடுத்து இருந்தார், ஆனால் இவரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. இதனால் கோபமடைந்த நெட்டிசன்கள் சச்சினை கேள்வி மேல் கேள்வியாக கேட்டு நச்சரிகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top