ராஜேஷ்.எம்.செல்வாவின் ‘தூங்காவனம்’ படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் கைவசம் ‘விஸ்வரூபம் 2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது.

கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான ‘விஸ்வரூபம்’ திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஷங்கரின் ‘இந்தியன் 2’-விலும், ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் ‘விஸ்வரூபம் 2’வின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன் 1 சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது, ‘சபாஷ் நாயுடு’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை இம்மாதம் துவங்க கமல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் கமல் நடிக்கும் மற்றொரு படம்  சபாஷ் நாயுடு இந்த ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு இந்திய நகைச்சுவைத் திரைப்படமாகும். தமிழ் மற்றும் தெலுங்கில் சபாஷ் நாயுடு என்ற பெயரிலும், இந்தியில் சபாஷ் குண்டு என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது.

கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தை அவரே எழுதி இயக்குகிறார். இத்திரைப்படம் கமல்ஹாசன் ஏற்கனவே தசாவதாரம் திரைப்படத்தில் நடித்த வேடங்களில் ஒன்றான பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மூலம் தயாரித்து வருகிறார்.

முக்கிய வேடங்களில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைத்து வரும் இதற்கு ஜெயகிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், ஜேம்ஸ் ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஏற்கெனவே, வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. ‘சபாஷ் நாயுடு’வின் அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகே ‘இந்தியன் 2’விற்கான வேலைகள் ஆரம்பமாகுமாம்.

கமல் சிலதினகளுக்கு முன் கொடுத்த ஒரு பேட்டியில் சினிமாவில் இனி நடிக்கமாட்டேன் எனவும் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் கூறினார்

தலைவர் இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று சொன்னார் ஆனால் இத்தனை படம் கை வசம் வைத்துள்ளார் என்று பார்க்கும் போது ரசிகர்கள் அனைவரும் ஆச்சிரியப்படுகிரார்கள்.