தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டு விளங்கியவர் சபர்ணா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துளசி தொடரில் வில்லியாக முத்திரை பதித்து வந்தார்.

மேலும் இவர் விஷாலின் பூஜை படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாக நடித்து கவனம் ஈர்த்தவர். இந்நிலையில் நேற்று இவர் சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இறந்த நிலையில் காணப்பட்டார். இவரது உடலை மீட்ட போலீசார் இவர் மூன்று நாட்களுக்கு முன்பாகவே தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர்.

இவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்த போது, இவர் கடந்த சில வாரங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் உலகில் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள் போன்ற கருத்துக்களை பதிவு செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இவருக்கு காதல் தோல்வி அல்லது பண மோசடி ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.