Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதுவே என் பாவரிட் படக்குழு! போட்டோவுடன் தகவலை பகிர்ந்த சாயீஷா
Published on
சாயீஷா
சாயீஷா வனமகன் படம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இதற்கு முன்பே தெலுங்கில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் நடித்தவர். தற்பொழுது தமிழில் ஜூங்கா, கஜினிகாந்த், கடை குட்டி சிங்கம் என்று வரிசையாக இந்த வருடம் இவர் படங்கள் ரிலீஸாகவுள்ளது.
கஜினிகாந்த்
சந்தோஷ்.பி.ஜெயக்குமார் எடுக்கும் ரொமான்டிக் காமெடி படம் கஜினிகாந்த். ஆர்யா ஹீரோ, சயீஷா ஹீரோயின். முக்கிய வேடங்களில் சதீஷ், கருணாகரன், சம்பத் நடிக்கின்றனர். பால முரளி பாலு இசையமைக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. அதனை சாயீஷா தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.