fbpx
Connect with us

Cinemapettai

சாத்தான்குளம் கொலையில் போலீசார் 6 பேர் மீது கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகுகணேஷை கைது செய்து இழுத்து சென்ற சிபிசிஐடி

Tamil Nadu | தமிழ் நாடு

சாத்தான்குளம் கொலையில் போலீசார் 6 பேர் மீது கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகுகணேஷை கைது செய்து இழுத்து சென்ற சிபிசிஐடி

சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் போலீசார்கள் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதனால் இந்த வழக்கு அதிவேகமாகச் செயல்பட்டது. தற்பொழுது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சினிமா நடிகர்கள் முதற்கொண்டு அரசியல்வாதிகள் பொதுமக்கள் என அனைவரும் இந்தக் கொலைக் குற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். மக்கள் அனைவரும் கொலை வெறியில் இருக்கும் பொழுது முதல்வர் பத்து லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். இதனால் இன்னும் சிலர் கோபம் அடைந்தனர்.

இந்த இருவர் கொலைக்கான காரணத்தை போலீஸ்காரர்கள் இடம் கேட்டால் முன்னுக்குபின் பல பதில்கள். மேலும் மேஜிஸ்ட்ரேட் இடமே திட்டிவிட்டு உன்னால் ஒரு மயிரும் புடுங்க முடியாது என கூறி உள்ளனர். அதை பற்றி கேட்டால் மன அழுத்தம் என்று சாதாரணமாக கூறிவிட்டனர்.

இப்படியே போனால் அனைவரும் கொலை செய்துவிட்டு மன அழுத்தம் மனக்கவலை என்று கூகூறினால் அதனை ஏற்றுக் கொள்வார்களா என்பது மக்களின் கேள்வி.

இந்நிலையில் சாத்தான்குளம் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முக்கியமாக உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் வழக்கில் இது அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் எஸ் ஐ. ரகு கணேஷ் கைது செய்யபட்டுள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று இன்னும் போராடி கொண்டிருகின்றனர் மக்கள்.

Continue Reading
To Top