India | இந்தியா
கன்னியாஸ்திரி மீது சாத்தானை ஏவி விடும் கூட்டம்.. என்னங்கடா ரொம்ப பயமுறுத்துறீங்க!
300 வருடங்களுக்கு முன்பு, இத்தாலி நாட்டின் சிசிலியில் அமைந்துள்ள பழமையான கட்டடம் ஒன்றிலிருந்து, 1676 ஆண்டு குறியீட்டு எழுத்துக்கள் கொண்ட கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது
இந்த கடிதத்தை எழுதிய கன்னியாஸ்திரி மரியா குரோஷிபிஷா என்பவர் தனது 15 வயது முதல் அந்த மடத்தின் கீழ் பணியாற்றி வந்துள்ளார். இவர் தன்னை சாத்தான் ஆட் கொண்டதாகவும், தான் நினைத்ததை தன் மூலம் சாதிக்க விரும்புவதாகவும் தன்னை கட்டாயப்படுத்தி அவர்களுக்கு சேவை செய்ய முயற்சிப்பதாகவும் கன்னியாஸ்திரி அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் மொழிபெயர்ப்பதில் மனிதன் கடவுளை உருவாக்கினான். ஆனால் அது யாருக்காகவும் செயல்படவில்லை. இக்கடிதத்தில் பூமியையும் ஆகாயத்தையும் இணைக்கும் ஒரு நதி குறித்தும் எழுதப்பட்டிருந்தது
அதுமட்டுமின்றி இந்த குறியீடுகளும் எழுதிய கன்னியாஸ்திரியை நிஜமாகவே சாத்தான் ஆட்கொள்ளப்பட்டது பற்றி முழுவதும் கூறவில்லை.
ஆனால், பல்வேறு பழமையான மொழிகளில் அவருக்கு அதிக அறிவு இருந்திருக்கலாம், அதனாலேயே இது போன்ற குறியீடுகளை அவர் எழுதி இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மேலும் அவருக்கு மனச்சிதைவு நோய் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவரின் மனநோயே இதுபோன்ற கற்பனைக்கு காரணமாக இருந்திருக்கலாம்” என டேனியல் வேஃபர் என்ற ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
