fbpx
Connect with us

வடிவேலுவை போல் தெருவைக்காணும் தெருவைக்காணும் என தேடிய சாமி-2 படக்குழு.!

saamy

News | செய்திகள்

வடிவேலுவை போல் தெருவைக்காணும் தெருவைக்காணும் என தேடிய சாமி-2 படக்குழு.!

நடிகர் விக்ரம் தற்பொழுது துருவநட்சத்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, மேலும் இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படம் சாமி-2 , சிங்கம்-3 படத்தை தொடர்ந்து ஹரி இயக்கும் திரைப்படம் தான் சாமி-2 இதன் முதல் பாகத்தையும் இயக்குனர் ஹரிதான் இயக்கினார் படம் தாறுமாறாக ஹிட் அடித்ததால் இதன் இரண்டாம் பாகத்தை தொடங்கினார்கள்.

saamy2

saamy

கடந்த வருடம் தான் சாமி-2 படபிடிப்பை தொடங்கினார்கள் இதுவரை 80% படபிடிப்பை முடித்துள்ளார்கள் படக்குழு. படத்தில் விக்ரம்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் மேலும் பாபி சிம்க வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தில் இன்னும் சில காட்சிகளும் மூன்று பாடல் காட்சிகளும் முடிந்தால் மொத்த படபிடிப்பும் முடிந்து விடும், தற்பொழுது சினிமா ஸ்ட்ரைக் நடப்பதால் சிறிது இடைவெளி விடப்பட்டுள்ளது ஸ்ட்ரைக் முடிந்ததும் படபிடிப்பு தொடங்கும்.

முதல் பாகத்தில் திருநெல்வேலி அல்வாட, மற்றும் சண்டைகாட்சிகள் நெல்லை நகரத்தில் எடுக்கப்பட்டது, அதனால் இரண்டாம் பாகத்திலும் நெல்லை நகரத்தில் திநெல்வேலி அல்வாட பாடல் போல் ஒரு குத்து பாடலை எடுக்க இருக்கிறார் ஹரி அதனால் நெல்லையில் உள்ள அந்த தெருவுக்கு போனால் தெருவே மாறிவிட்டதாம் 15 ஆண்டுகளுக்கு முன்பு போல் இல்லாமல் தெருவே மாறியுள்ளது.

சாமி-2  படக்குழுவோ எங்கட தெருவை காணும் என தேடிபார்த்துவிட்டு, சாமி முதல் பாகத்தில் உள்ள தெரு போலவே நெல்லை புறநகரில் விரைவில் செட் போட்டு படபிடிப்பை நடத்தத முடிவு செய்துள்ளார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top