Connect with us
Cinemapettai

Cinemapettai

saamy2-movie-review

Reviews | விமர்சனங்கள்

சாமி 2 விமர்சனம்! கவிழுமா? தப்புமா?

சாமி ஸ்கொயர் திரைவிமர்சனம் – Saamy 2 Review

சாமி 2

15 வருடங்கள் கழித்து படத்தின் இரண்டாம் பக்கத்தை எடுக்க முடிவு செய்தனர் ஹரியும் – விக்ரமும். ஹோலிவுட்டில் இதெல்லாம் சகஜமான ஒன்று, எனினும் நம் கோடம்பாக்கத்திற்கு இது ரொம்ப புதுசு. அதுவும் முதல் டீஸர் வெளிவந்தவுடன், எதிர்மறையான விமர்சனங்களை  சந்தித்தது படக்குழு. எனவே  வாங்க பாப்போம் அன்று   ஆறுச்சாமி  செய்த மேஜிக்கை இன்று அவர் மகன் ராமசாமி செய்தாரா என்று.

கதை 

விட்ட இடத்தில் இருந்து தொடங்குகிறது படம். ( திரிஷா கால்ஷீட் கொடுக்காததால் மொளகாப்பொடி மம்மி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்). பீர் இட்லி தொடங்கி பெருமாள் பிச்சை சாவு வரை நகர்கிறது அந்தப்பகுதி.  இலங்கையில் இருந்து  வரும்  பிச்சையின் மூன்று மகன்கள் , அப்பாவுக்கு நேர்ந்ததை     கண்டுபிடிக்க, பின்னர் ஆறுச்சாமி மற்றும் அவரது மனைவியை டார்கெட் செய்வதுடன் முடிகிறது.

28 வருடம் கழித்து   சமகாலத்தில் டெல்லியில் மந்திரியிடம் மானேஜராக வேலை செய்யும் ராமசாமி ( சாமி 2 )  , கலெக்டராவதே இவரின் கனவு. வழக்கம் போல வெளி நாட்டில் இருந்து வரும் மந்திரியின் மகளாக கீர்த்தி சுரேஷ். இயக்குனர் ஹரி ஸ்டைலில் பாட்டு, சூரியின் காமெடி , சண்டை , காதல் செண்டிமெண்ட் என பகிர்கிறது படம்.

போஸ்டிங் எடுக்கும் தருணத்தில் IAS  வேண்டாம் என்று கூறி IPS  எடுக்கிறார் சாமி ஜூனியர். வீட்டிற்கு     வந்ததும் பிளாஷ் பாக் சொல்லும் டெல்லி கணேஷ், கமிஷனராக திருநெல்வேலிக்கு செல்கிறார் குட்டி விக்ரம்.

வழக்கம் போல, பழைய அப்பா – அம்மாவின் கொலை கேஸை தூசி தட்டுகிறார் சீயான்.   வில்லன்களுடன் (பாபி சிம்ஹா மட்டுமே ஒர்த் ) மோதல் , சில டூயட் என்று சென்று , கடைசியில் நல்லவன் ஜெயிக்க , கெட்டவன் அழிய முடிகிறது படம்.

பிளஸ் 

விக்ரம், முதல் பார்ட் மற்றும் இரண்டாம் பகுதியின் இணைப்பு

மைனஸ் 

சூரி காமெடி, மொக்கை லாஜிக் , எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை

சினிமாபேட்டை அலசல் 

மேக்ஸ் படிக்கிறப்ப ஈஸியா தோணும், அதே கணக்கை போட்டுப்பாத்தா அதன் கஷ்டம் தெரியும். அதே பாடு தான் இயக்குனர் ஹரிக்கு இந்த சாமி 2 படத்தில். விக்ரம் போன்ற நடிகரின் கால் ஷீட், ஹரியின் திறனுக்கு அசதி இருக்கலாம், ஆனால் மனிதர் சொதப்பிவிட்டார் பல இடங்களில், நம் பொறுமையை அதீதத்துக்கு சோதித்து விடுகிறார்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் 

பல இடங்களில் சாமி முதல் பகுதி பார்த்த எபக்ட் தான் வருகின்றது. சில இடங்களில் பேய் படமா என்று கூட தோன்றுகிறது. இதுமட்டுமன்றி  சிங்கம் ஸ்டைலில் கீர்த்தி சுரேஷின் குடும்பம் மற்றும் காதல் டிராக் சலிப்பை தட்டுகிறது. வில்லன்கள் மூவரும் நமக்கு ஆறு படத்தின் “நாதன் & கோ” பரதர்ஸை  நினைவு படுத்திக்கின்றனர் .  ஆக மொத்தத்தில் ‘ஐய்யா சாமி ஐஸ் பேக்’ என்று சென்ற நம்மை ‘அய்யயோ சாமி ஐஸ் பேக்’ என்று சொல்ல வைத்துவிட்டார் ஹரி.

சினிமாபேட்டை ரேட்டிங் 2 . 25 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top