Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் வரும் ஆறுச்சாமி… நல்ல நாள் குறித்த படக்குழு
சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் சாமி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
இரண்டாம் பாகங்களை வெற்றி படமாக்க இயக்குனர் ஹரியிடம் தான் கத்துக்கொள்ள வேண்டும். சூர்யா நடிப்பில் காவல்துறை கதையான சிங்கம் படத்தை தொடர்ச்சியாக மூன்று பாகங்கள் எடுத்து அதில் வெற்றியும் கண்டார். இதை தொடர்ந்து, அவரின் இயக்கத்தில் வெளியாகிய சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படக்குழு இப்படத்தை சாமி ஸ்கொயர் என அழைத்து வருகிறது. அப்பா, மகன் என இரு வேடங்களில் சியான் விக்ரம் நடிக்கிறார்.
முதல் பாக ஹீரோவான ஆறுச்சாமியின் மகனான இளம் விக்ரமுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா நடிக்க மாட்டேன் என ட்வீட்டினாலும், இயக்குனர் ஹரி இப்படத்தில் த்ரிஷா இருப்பதாக அறிவித்தார். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார். பிரபு, சூரி, ஓஏகே.சுந்தர், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தை ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படமும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் சியானின் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் என கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மே 17-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் தனது ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். இப்படம் வெற்றி பெறும் பட்சத்தில் சிங்கம் படத்தை போல சாமியும் அடுத்த பாகத்திற்கும் தயாராகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது.
