Connect with us
Cinemapettai

Cinemapettai

saamy2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சாமி 2-வில் அதல்லாம் சுத்த வதந்தி என கூறி மாட்டிகொண்ட இயக்குனர் ஹரி.!

நடிகர் விக்ரம் தற்பொழுது ஸ்கெட்ச் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது, மேலும் இந்த படத்தை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படமும் இறுதிகட்ட படபிடிப்பை நெருங்கிவிட்டது,தற்பொழுது விக்ரம் சாமி2 படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த படத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹரி பல சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.அதில் ஹரி கூறியதாவது இந்த படத்தில் மொத்தம் 5 சண்டை காட்சிகள் இடம்பெறுகின்றன மேலும் இரண்டு சேசிங்களும் இருகின்றன அதுமட்டும் இல்லாமல் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன என கூறினார்.

மேலும் இந்த படத்தில் விக்ரம்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா நடிக்கிறார்,ஆம் அதாவது அப்பா விக்ரமுக்கு ஜோடியாக நடிகை திரிஷாவும் ,மகன் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், திரிஷா சாமி 2 படத்தில் திரிஷா நடிக்கவில்லை என்று வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என கூறினார் ஹரி.

ஆனால் நடிகை திரிஷா இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இதை ஹரி மறந்துவிட்டார் போல.இதை கண்ட ரசிகர்கள் ஹரியை விமர்ச்சித்து வருகிறார்கள்.

மேலும் சாமி 2 படத்திற்காக சமீபத்தில்  பெரிய செட்டு போடப்பட்டது கரைக்குடி மற்றும் திருநெல்வேலியில்.பிச்சை பெருமாள் இறந்து 29ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்து ஒட்டப்பட்ட போஸ்ட்டரில் அவர்களுடைய மகன்கள் படம் இடம் பெற்று இருந்தது.

பாபி சிம்கா,OAK சுந்தர் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் பழிவாங்கும் மகன்கள் கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர் மூவரையும் அழித்து பிச்சை பெருமாள் சிலையை அகற்றும் காட்சி படமாக்கப்பட்னது.

இதில் அப்பா மகன் இன இரு காதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். கதைப்படி இரண்டாவது மகனை மையமாக வைத்து கதைகளம் படமாக்கப்பட்டு வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top