இந்திய சினிமா வரலாற்றில் படுமோசமான தோல்வியடைந்த சாஹோ..

இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சாஹோ படம் தோல்வி அடைந்துள்ளது. திரையிட்ட இரண்டே நாட்களில் திரையரங்குகளை விட்டு ஓடிவிட்டது சுமார் 300 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் திரையிட்ட தியேட்டர்களின் வாடகை கூட வரவில்லை என அழுகிறார்கள்.

இதுவரை இந்திய சினிமாவில் படுமோசமான படமென்றால் இந்தியில் எடுக்கப்பட்ட ‘தாஜ்மஹால்’ ஷாஜஹானின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த காலத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது. அந்த திரைப்படம் வெளியே வந்து படுதோல்வி அடைந்தது. இன்றுவரை அதிக பட்ஜெட்டில் படுதோல்வி அடைந்த படமென்றால் அது தாஜ்மஹால்.

இப்பொழுது சாஹோ அதை முந்திக் கொண்டது. பிரபாஸ் என்னும் தனி மனிதரை வைத்து இத்தனை கோடிகள் செலவு செய்யலாமா? ஒரு சில சினிமா விநியோகஸ்தர்கள் கேட்டால் ராஜமவுலி பாகுபலியை எடுக்க சுமார் 15 ஆண்டுகள் காத்திருந்தார்.

ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு மிகப்பெரிய திட்டம் தீட்டினார். அதற்கு அவர் பல வருடங்களாக உழைத்தார். அவர் உழைப்பிற்கு கதை திரைக்கதை வசனம் இயக்கம் பிரம்மாண்டம் என எல்லாவற்றையும் சேர்த்து தந்தார். அதை பார்க்கவும் நன்றாக இருந்தது. ஆனால் சாஹோ திரைப்படத்திற்கு எந்த ஒரு உழைப்பையும் போடவில்லை.

பணம் மட்டுமே வைத்துக்கொண்டு பிரம்மாண்டம் என காட்டிவிடலாம் என்று நினைத்தார்கள். அதுவும் அனுபவம் இல்லாத இயக்குனர் இந்த படத்தின் கதையை சொல்லி ஓகே செய்தாரா? அல்லது பிரபாஸ் இந்த கதையை படமாக பண்ணலாம் என இந்த இயக்குனரை ஓகே செய்தாரா தெரியவில்லை. ஆக மொத்தம் நஷ்டம்.

Leave a Comment