சாஹோ சங்கு ஊதிருமோ? விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி

பாகுபலி புகழ் பிரபாஸ் மற்றும் பாலிவுட் புகழ் ஸ்ரத்தா கபூர் இணைந்து நடித்த சாஹோ படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளி வருகிறது. சாஹோ படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மசாலாவில் உருவாகியுள்ளது.

பிரபாஸ் இதற்கு முன் நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் தமிழ்நாட்டில் ஏ, பி மற்றும் சி சென்டர்களில் வசூலை வாரி குவித்தன. குறிப்பாக பாகுபலி2 படம் மட்டுமே தமிழ்நாட்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரமிக்க வைத்தது.

ஆனால் சாஹோ படம் அந்த வசூலில் கால்வாசி எடுப்பது கூட சந்தேகமாக உள்ளது. காரணம் என்னவென்றால் ஏ சென்டர் ஆடியன்ஸ் களுக்கு மட்டுமே படம் ரிலீஸ் ஆக இருப்பது தெரிகிறது.

ஆனால் சி சென்டர் ஆடியன்சுக்கு படத்தின் ரிலீஸ் டேட் கூட தெரியாமல் இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படத்தை பெரும் தொகைக்கு வாங்கிய விநியோகஸ்தர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.

புரொடியூசருக்கு தலையில துண்டு விழுந்துருமோ?

Leave a Comment